Home இலங்கைபெருந்தோட்ட பகுதியில் பாரிய கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை…

பெருந்தோட்ட பகுதியில் பாரிய கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை…

by admin


திம்புள்ள பத்தனை காவற்துறைப் பிரிவிற்குட்பட பத்தனை டெவான் பிரதேசத்தில் பெண் ஒருவரால் வீடொன்றிற்குள் சட்டவிரோதமாக நடத்திச் செல்லப்பட்ட, பாரிய அளவிலான கசிப்பு தயாரிப்பு நிலையம் ஒன்றை விசேட போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் சுற்றி வளைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஜா எல பகுதியை சேர்ந்த பெண் ஒருவரால் இயக்கப்பட்ட இந்த கசிப்பு தயாரிப்பு நிலையத்திலிருந்து, 2300 போத்தல்களில் அடைக்கப்பட்ட கசிப்பு, லொறி ஒன்றின் மூலம் நேற்று (04.02.2019) இரவு பத்தனை நாவலப்பிட்டி பிரதான வீதி ஊடாக கொழும்புக்கு கொண்டு செல்லும் போது நாவலப்பிட்டி நகரில் விசேட போதைபொருள் ஒழிப்பு அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது கசிப்பு போத்தல்களுடன் சாரதி மற்றும் நடத்துனரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் கசிப்பு தயாரிக்கும் இடடான பத்தனை பகுதியை நோக்கி விரைந்தனர்.

அங்கு கசிப்பு நிலையத்திற்கு பொறுப்பான பெண் மற்றும் மேலும் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் கசிப்பு நிரப்பப்பட்ட 124036 போத்தல்கள் உள்ளடங்கிய பெருமளவு மில்லிலீற்றர் கசிப்பு தயாரிக்கும் நீர், 48 கசிப்பு பரல்கள், 10 அடி நீள பிளாஸ்டிக் குழாய், எரிவாயு சிலின்டர்கள், துருப்பிடித்த தகரம் உள்ளட்ட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

முதல் முறையாக பெருந்தோட்ட பகுதியை உட்படுத்தி பாரிய கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரையும் நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக விசேட போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை விசேட போதைபொருள் ஒழிப்பு பிரிவினருடன் இணைந்து நாவலப்பிட்டி மற்றும் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More