ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முறைப்படி விலகுவதற்கான ஒப்பந்தம் இல்லா பிரெக்சிற் தொடர்பாக அடுத்த மாதம் 12ம் திகதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என பிரித்தானிய பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முறைப்படி விலகுவதற்கான பிரெக்சிற நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகின்ற நிலையில் இது தொடர்பில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை பிரித்தானிய பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது.
மேலும் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் திட்டத்துக்கு எதிராக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஒப்பந்தத்தினை ஏற்படுத்த தெரசா மேயை வலியுறுத்திய போதும் ஐரோப்பிய ஒன்றியம் புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது.
பிரெக்ஸிற் நடவடிக்கையின் காலக்கெடு எதிர்வரும் மார்ச் 29ம் திகதி முடிவடைவதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையில் ஒப்பந்தம் இல்லா பிரெக்ஸிற் தொடர்பாக அடுத்த மாதம் 12ம் திழகதி பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.