டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது தனது வருமானம் மற்றும் சொத்துகள் தொடர்பாக் தவறான தகவல் அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் இன்றைய தினம் பிணை வழங்கியுள்ளது.
2013ஆம் ஆண்டு டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் வருமானம் மற்றும் சொத்துகள் தொடர்பாக தவறான தகவல்களை அளித்திருந்ததாக அரச சார்பற்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கின் மறுவிசாரணை நேற்று நடைபெற்றபோது கெஜ்ரிவால் நீதின்றி;ல ஆஜராகவில்லை. தனது பணிச்சுமை காரணமாக ஆஜராக இயலவில்லை என தனது சட்டதரணி மூலம் தெரிவித்திருந்த கெஜ்ரிவால் இன்று காலை நீதிபதியின் முன் ஆஜரானார்.
அவரை 10 ஆயிரம் ரூபாய் சொந்த பிணையில் விடுவித்த நீதிபதி, வழக்கின் மறுவிசாரணையை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.