Home சினிமாயுவன் சங்கர் ராஜா படத்தின் மூலம் மீண்டும் லைலா

யுவன் சங்கர் ராஜா படத்தின் மூலம் மீண்டும் லைலா

by admin



பார்த்தேன் ரசித்தேன், தில், நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து, மவுனம் பேசியதே, கண்டநாள் முதல் ஆகிய படங்களில் நடித்து லைலா மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.

தமிழில் 1999இல் கள்ளழகர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லைலா. இப்படத்தை தொடர்ந்து ‘முதல்வன், ரோஜா வனம், பார்த்தேன் ரசித்தேன், தில், நந்தா, காமராசு, பிதாமகன், உன்னை நினைத்து, மவுனம் பேசியதே, கண்டநாள் முதல்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அத்துடன் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

2006இல் திருமணத்துக்கு பின்னர், இவர் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்துக் கொண்டார். தற்போது, நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். கண்டநாள் முதல் படத்தில் நடித்த பிரசன்னா, கார்த்திக் குமார், லைலா மற்றும் படத்தை இயக்கிய பிரியா ஆகியோர் ஒரு சந்திப்பில ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி நடப்பதாக அதில் கதாநாயகனாக நடித்திருந்த பிரசன்னா தெரிவித்து இருந்தார். எனவே அந்த படத்தில் லைலா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கு முன்னதாகவே ‘ஆலீஸ்’ என்ற திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். மணிசந்துரு இப் படத்தை இயக்குகின்றார். இதில் கதாநாயகியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து பிரபலமான ரைசா நடிக்கிறார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More