கிறிஸ் கெய்ல், இம்ரான் தாஹிரைத் தொடர்ந்து தென்னாபிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சு வீரரான டுமினியும் உலகக்கிண்ணத் தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் போட்யிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராள கிறிஸ் கெய்ல் உலகக்கிண்ணத் தொடருக்குப்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
அதேபோன்று தென்னாபிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிரும் உலகக்கிண்ணத் தொடருடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தநிலையில் தென்னாபிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சு வீரரான ஜேபி டுமினியும் உலகக்கிண்ணத் தொடடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். டுமினி கடந்த 2017-ம் ஆண்டு டெஸ்ட் மற்றும் முதல்தர போட்டிகளிலிருருந்து ஓய்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது