குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமய சகவாழ்வை கட்டியெழுப்பும் நோக்கில் தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் உள்ள மத சார்ந்து செயற்படும் குழுக்களிடையே பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் மாத்தறை மாவட்டத்தில் உள்ள வெலிகம பிரதேசத்தை சேர்ந்த சர்வமத குழுவினர் மன்னார் மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணம்; ஒன்றை மேற்கொண்டு இன்று (18)வருகை தந்துள்ளனர்.
மன்னார் மாவட்டதில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாகவும் மத ரீதியான நல்லெண்னத்தை வளர்துக்கொள்ளும் முகமாகவும் நேரடியாக திறந்த மத கலந்துறையாடல்களுக்கு வழி சமைக்கும் வகையில் குறித்த பயணம்; இடம் பெற்றுள்ளது.
இவ் நிகழ்வில் மன்னார் சமூக காவல்துறை உத்தியோகஸ்தர்கள், அரச உத்தியோகஸ்தர்கள் ,சமூக ஆர்வலர்கள் ,அரச சார்பற்ற நிறுவன உழியர்கள், கிராம சேவகர்கள் ,மத சார் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்
குறித்த பயணத்தின் ஒரு பகுதியாக இன்று காலை 9 மணியளவில் மன்னார் தனியார் விடுதியில் மன்னார் மாவட்ட சர்வ மத பிரதி நிதிகளுக்கும் அதே நேரத்தில் வெலிகம பகுதி சர்வமத பிரதி நிதிகளுக்கும் இடையில் விசேட ஒன்று கூடல் இடம் பெற்றது.
குறித்த ஒன்று கூடலின் போது பல் வேறுபட்ட மதம் சார்ந்த நிகழ்வுகளும் அனுபவ பகிர்வுகளும் இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள மதம் சார்ந்த பிரசித்தி பெற்ற மத ஸ்தலங்களுக்கு செல்லவும் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.