Home பிரதான செய்திகள்ஆப்கானிஸ்தான் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனை

ஆப்கானிஸ்தான் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனை

by admin

அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது

இரு அணிகளுக்குமிடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இந்தியாவின் டேராடூனில் நேற்று முன்தினம் ஆரம்பமாகியிருந்த நிலையில் நாணய சுழற்சியை வென்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து முதல் இன்னிங்சில் 172 ஓட்டங்களை பெற்றது.

அதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 314 ஓட்டங்களைப் பெற்றது.
இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த அயர்லாந்து அணி 288 ஓட்டங்களை பெற்ற நிலையில் 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து கொண்டுள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More