Home இலங்கைமாகந்துரே மதூஷின் மேலும் இரு நண்பர்கள், நாடு கடத்தப்பட்டனர்..

மாகந்துரே மதூஷின் மேலும் இரு நண்பர்கள், நாடு கடத்தப்பட்டனர்..

by admin


மாகந்துரே மதூஷின் மேலும் இரு சகாக்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். டுபாயில் பாதாள உலகக் குழு தலைவர் மாகந்துரே மதூஷுடன் 31 பேர் அண்மையில் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் பாடகர் அமல் பெரேரேவின் மகன் மற்றும் கஞ்சிப்பான இம்ரான் உட்பட சிலர் இலங்கைக்கு ஏற்கனவே நாடு கடத்தப்பட்டனர்.

இந்நிலையில், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்டு வந்த மொஹமட் சித்தீக் மொஹமட் ஷியாம் மற்றும் வீரசிங்க லங்கா சஜித பெரேரா ஆகியோர் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்று காலை 4.50 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More