149
யாழ்ப்பாணம் பழைய தபால நிலைய வீதியில் வெளிமாவட்ட தனியார் பேருந்து நிலையம் அமைந்திருந்த இடத்தில் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி பழைய தபாலக வீதியில் பழைய பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நேரக் காப்பாளரின் தகர அடைப்பு மற்றும் அங்கு கொட்டப்பட்டிருந்த கழிவு குப்பை என்பவற்றுக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதனை அணைக்கும் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படையினர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love