குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அபிவிருத்தி விசேட நியமச் சட்டத்திற்கு மத்திய மாகாணத்திலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மத்திய மாகாண சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போதும், ஏனைய மாகாணங்களைப் போன்றே எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சியினர் கோரியுள்ள போதும் விவாதம் நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அவையை விட்டு வெளிநடப்புச் செய்துள்ளனர். ஆளும் கட்சியின் 36 உறுப்பினர்களில் 32 பேர் அபிவிருத்தி விசேட நியமச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்ததுடன் நான்கு உறுப்பினர்களும் வாக்கெடுப்பு நடத்தும் போது அவையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.