கேரளா மாநிலத்தில் இயங்கும் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் புர்கா, நிக்காப் போன்ற முகத்திரைகளும் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களினையடுத்து இலங்கையில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இலங்கையில் சகலவிதமான முக திரைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது
இந்தநிலையில் கேரளாவில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புபட்ட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கேரளாவில் உள்ள முக்கிய நகரில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டம் மேற்கொண்டமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கேரளா மாநிலத்தில் உள்ள முஸ்லிம் கல்வி குழுமத்திற்கு சொந்தமான 10 தொழில்முறை கல்லூரிகள், 18 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 12 உயர்நிலைப்பள்ளிகள், உட்பட 150 கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு காரணமாக வளாகத்திற்குள் புர்கா, நிக்காப் போன்ற எவ்வித முகத்திரைகளும் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது
உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் உடை நெறிகளில் மாற்றம் செய்யலாம் என்பதன் அடிப்படையிலேயே இந்த முடிவு பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்டுள்ளது எனவும் எவ்வித கலாச்சாரத்தையும் பாதிக்க இந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
#Burqa #banned #MESschools #colleges #Kerala