குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்துவது குறித்து ரஸ்யாவும் துருக்கியும் யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளது. துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu இதனைத் தெரிவித்துள்ளார். துருக்கியும் ரஸ்யாவும் கூட்டாக இணைந்து யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றை தயாரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ரஸ்யா மற்றும் துருக்கி ஆகிய தரப்பின் இந்த யோசனைக்கு ஜனாதிபதி அசாட்டின் ஒத்துழைப்பு அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிரியாவிற்கான தீர்வுத் திட்டங்கள் குறித்த இரண்டு எழுத்து மூலமான யோசனைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்று அரசியல் தீர்வுத் திட்டம் எனவும் மற்றையது யுத்த நிறுயுத்தம் பற்றியது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டங்களை எந்த நேரத்திலும் அமுல்படுத்தப்பட முடியும் என கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.