169
வவுனியாவில் இரண்டு வாள்களுடன் வர்த்தகர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள ஹாட்வெயார் ஓன்று இராணுவத்தினரால் சோதனையிடப்பட்ட போதே இவ்வாறு இரண்டு வாள்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் கைது செய்த வவுனியா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #Vavuniasrilanka #arrest
Spread the love