Home இலங்கை IMF 164.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணக்கம்…

IMF 164.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணக்கம்…

by admin

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 164.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ள 5 ஆவது கட்ட கடன் தொகையாக இது அமைந்துள்ளது.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலுக்கமைய இலங்கை மத்திய வங்கி அந்நிய செலவாணி கையிருப்புக்கான திட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்காமையினால் இந்த கடன் தொகை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டிருந்தது.

தற்போது இலங்கை மத்திய வங்கியின் அந்நிய செலவாணி கையிருப்பு தொடர்பான நடைமுறைகளில் திருப்தி கொண்டிருப்பதினால் இந்த தொகையை விடுவிக்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #IMF #centralbankSrilanka

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More