Home இலங்கைமுள்ளிவாய்க்காலில், ப.ஜ.க – தமிழக இந்துமக்கள் கட்சி உறுப்பினர்கள் அஞ்சலி….

முள்ளிவாய்க்காலில், ப.ஜ.க – தமிழக இந்துமக்கள் கட்சி உறுப்பினர்கள் அஞ்சலி….

by admin

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜீன் சம்பத் மற்றும் இந்தியாவின் ஆளும் கபட்சியான பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சங்கிலி மன்னனின் 400 ஆவது ஆண்டு விழாவுக்காக தமிழகத்திலிருந்து இந்து மக்கள் கட்சி மற்றும் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் நேற்று யாழ்ப்பாணத்தை சென்றடைந்தனர். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று பல இடங்களை பார்வையிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களான அருண் உபாதெயாய, தீட்சாக்கௌசிக், தமிழக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத்,மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏழு பேர் இப் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய தினம் மாலை இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்று போரில் உயிரிழந்த மக்களுக்காக வணக்கம் செலுத்தியுள்ளதுடன் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More