Home இலங்கை2016ம் ஆண்டில் 370 வெளிநாட்டுப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

2016ம் ஆண்டில் 370 வெளிநாட்டுப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கடந்த 2016ம் ஆண்டு 370 வெளிநாட்டுப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பிரஜைகள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாட்டின் வீசா சட்டங்களை மீறிச் செயற்பட்ட காரணத்தினால் இவ்வாறு இவர்களை இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் நாடு கடத்தியுள்ளது.

மேலும் பல்வேறு காரணங்களுக்காக நாட்டில் தங்கியிருந்த 728 வெளிநாட்டுப் பிரஜைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன் குறித்த காலப் பகுதியில் 45 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த 154 பேரும் 51 சீனர்கள், 47 பாகிஸ்தானியர்கள், 33 நேபாளப் பிரஜைகள் மற்றும் 25 தாய்லாந்துப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More