சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிரபல பிஸ்கட் தொழிற்சாலையில் இருந்து 26 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பார்லே-ஜி என்ற பிரபல பிஸ்கட் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த நிறுவனத்தினை சோதனையிட்ட காவல்துறையினர் அங்கு பணியமர்த்தப்பட்டிருந்த 26 குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளனர்
இதனையடுத்து குறித்த தொழிற்சாலை மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் மீட்கப்பட்ட 26 குழந்தைகளும், 13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்களுக்கு மாதம் ஐந்தாயிரம் முதல் ஏழாயிரம் வரை சம்பளம் கொடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்
#சத்தீஸ்கர் #பிஸ்கட் தொழிற்சாலை #குழந்தைதொழிலாளர்கள் #மீட்பு