Home உலகம்மாலியில் 2 கிராமங்களில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 41 பேர் பலி

மாலியில் 2 கிராமங்களில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 41 பேர் பலி

by admin


மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் உள்ள கங்காபானி மற்றும் யோரோ ஆகிய 2 கிராமங்களில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 41 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மாலியில் இரு இனத்தவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அண்மையில் அந்நாட்டின் மத்திய பகுதியில் ஒரு கிராமத்துக்குள் ஆயுதம் ஏந்திய குழுக்கள் புகுந்து நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில்; நேற்று முன்தினம் இரவு மத்திய பகுதியில் உள்ள கங்காபானி மற்றும் யோரோ ஆகிய 2 கிராமங்களுக்குள் சென்ற ஆயுதம் ஏந்திய குழுக்கள் மக்களை கொன்றுள்ளதுடன் அவர்களது வீடுகளை தீவைத்தும் எரித்துள்ளனர். இதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

பின்னர் அவர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்ற அவர்கள் யோரோ என்னும் கிராமத்துக்கு சென்று கிராமவாசிகள் 24 பேரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்காத நிலையில், இது பயங்கரவாதிகளின் சதிச்செயல் என அரசு தெரிவித்துள்ளது.

#மாலி   #இனந்தெரியாத நபர்கள் #mali

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More