Home சினிமாலாபம் படத்தில் புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி

லாபம் படத்தில் புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி

by admin


லாபம் என்ற திரைப்படத்திற்காக புதிய தோற்றத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் புகைப்படம் ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இப் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

`லாபம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு நாயகியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுசிறுப்பாக நடைபெற்று வருகிறது. லாபம் படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்திற்காக புதிய கெட்டப்பபில் விஜய் சேதுபதி நடித்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அடர்ந்த முடி, அடர்ந்த தாடியுடன் விஜய் சேதுபதியின் இந்த கெட்டப் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. #லாபம் #புதிய தோற்றத்தில் #விஜய் சேதுபதி

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More