Home இலங்கைசஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற 8 சந்தேக நபர்களின் விளக்க மறியல் நீடிப்பு…

சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற 8 சந்தேக நபர்களின் விளக்க மறியல் நீடிப்பு…

by admin

பயங்கரவாதி சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும், அவரது அடிப்படைவாத போதனை நிலையங்களில் பங்பற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கு மாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறை பகுதியில் சஹ்ரானிடம் தொடர்பை பேணியதாக, குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட 14 சந்தேக நபர்களை, நீதிமன்றத்தின் அனுமதியுடன் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சந்தேக நபர்களை நேற்று கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் அம்பாறை குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னிலைப்படுத்தினர். இதன் போதே நீதிவான் அவர்களை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More