வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் யாழ்ப்பாணப் பிரதேச செயலகமும், பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா கடந்த 26.07.2019 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பிரதேச செயலர் சாம்பசிவம் சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கரகம், காவடி, கோலாட் டம் , மயிலாட் டம், மீனவ நடனம் ஆகியவற்றுடனான பண்பாட்டு ஊர்வலம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சர்வமத குருமாரின் ஆசியுடன் மண்டபத்தில் பல்வேறு கலை நிகழ்வுகளும் நாடகமும் பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு ம் இடம்பெற்றது.
இலக்கியம், நாட்டியம், நாடகம், நாட்டுக்கூத்து, மேடையமைப்பு மற்றும் ஒப்பனைத்துறை சார்ந்த எட்டு மூத்த கலைஞர்கள் யாழ்ப்பாணப் பிரதேச கலாசாரப் பேரவையால் ‘யாழ். ரத்னா’ விருதும் . இளங்கலைஞர்களுக்கு விருதுச் சான்றிதழ்களும் வழங்கப் பட் டன . முக்கிய விடயமாக ”யாழ்பாடி ”கலாசார மலரும் வெளியீடு செய்யப்பட்டது.