தலிபான் அமைப்பினருடன் மேற்கொள்ளப்படவிருந்த அமைதி உடன்படிக்கை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இன்று, ஞாயிறுக்கிழமை, கேம்ப் டேவிட்டில் தலிபான் தலைவர்களை டிரம்ப் சந்திக்க இருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றதனையடுத்து இவ்வாறு திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பை ரத்து செய்த டிரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்தும் விலகியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தற்போது சுமார் 14,000 அமெரிக்கப் படையினர் உள்ள நிலையில் தலிபான் அமைப்புடன் செய்துகொள்ளப்படவிருந்த ஒப்பந்தத்தின்படி 20 வாரங்களுக்குள் 5,400 படையினரை திரும்பப்பெற்றுக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #தலிபான் #அமைதிஉடன்படிக்கை #ரத்து #டிரம்ப்