பாகிஸ்தானில் தெய்வநிந்தனை செய்ததாக தலைமை ஆசிரியர் ஒருவர் மீது பதின்ம வயது மாணவர் ஒருவர் குற்றம் சுமத்தியதனை தொடர்ந்து அவர்மீது தாக்குதல் மேற்கொண்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிந்து மாகாணத்தில் உள்ள அந்த பாடசாலையை நடத்தும் தலைமையாசிரியர், நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை கோட்கி நகரில் உள்ள இந்து கோயில், கடைகள் மற்றும் பாடசாலையை தாக்கியுள்ளனர்.
மேலும் தலைமையாசிரியர் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது #பாகிஸ்தானில் #தெய்வநிந்தனை #தலைமைஆசிரியர் #குற்றச்சாட்டு #மரண தண்டனை