Home இலங்கைஅரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளதாக விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளதாக விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்கம் இந்த நாட்டை காட்டிக் கொடுத்துள்ளதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். 1818ம் ஆண்டில் போன்று காட்டிக் கொடுக்கும் ஒப்பந்தம் ஒன்றின் ஊடாக காணிகளை வெளிநாட்டவருக்கு தாரை வார்க்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்;த நடவடிக்கைக்கு எதிராக அமைதியான முறையில் மக்கள் நடத்திய போராட்டம் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை அரசாங்கம் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகளை முன்னிலைப்படுத்தி நீதிமன்ற உத்தரவினை மீறாது ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல்களினால் கர்ப்பிணித் தாய்மாரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்காக குரல் கொடுத்த அப்பாவிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More