Home இலங்கைஅமெரிக்க பிரஜாவுரிமை – கோத்தாபய இன்று ஊடகவியலாளர் மகாநாடு

அமெரிக்க பிரஜாவுரிமை – கோத்தாபய இன்று ஊடகவியலாளர் மகாநாடு

by admin


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஊடகவியலாளர் மகாநாட்டினை நடத்தவுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாகவே இவ்வாறு ஊடகவியலாளர் மகாநாட்டினை நடத்தவுள்ளதாக அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ஸ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டமைக்கான ஆதாரங்களை 3 நாட்களில் வெளியிட வேண்டும் என்பதனை வலியுறுத்தி வணக்கத்திற்குரிய இங்குருவத்தே சுமங்கள தேரர் இன்று காலை முதல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது  #அமெரிக்கபிரஜாவுரிமை  #கோத்தாபய #ஊடகவியலாளர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More