Home இலங்கைதொழில் செய்து கொண்டிருந்த பெண் தேயிலை மலையிலிருந்து வீழ்ந்து மரணம்

தொழில் செய்து கொண்டிருந்த பெண் தேயிலை மலையிலிருந்து வீழ்ந்து மரணம்

by admin

கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட கட்டுகிதுல ஹெல்பொட தோட்டம் கீழ் பிரிவில் இன்று (10) பகல் 11.30 மணியவில் 30 ஆம் இலக்க தேயிலை மலையில் பெண்கள் கொழுந்து எடுப்பதை கண்காணித்துக் கொண்டிருந்த பெண் கங்காணி ஒருவர் தவறுதலாக வழுக்கி 50 அடி  உயரத்தில் இருந்து வீழ்ந்ததில் மரணமானார். இவர் ஹெல்பொட தோட்டத்தை சேர்ந்த விஸ்வநாதன் விமலாவதி (வயது 47) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

சம்பவத்தை தொடர்ந்து விஸ்வநாதன் விமலாவதியின் உடல் தற்பொழுது  புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டி பிரதேச வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கபட்டடுள்ளது.  இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More