டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான மாணவி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடந்த 3 நாள்களாக சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த ஸ்ரீசுதாகரன் பெண்சிட் பிரசாந்தி (வயது -9) என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்தார்.
கடந்த 16ஆம் திகதி காய்ச்சல் காரணமாக சிறுமி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டெங்கு நோய்த் தொற்று உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு 3 நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார்.அந்நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறப்பு விசாரணைகளை மல்லாகம் பிரதேசத்திற்கு பொறுப்பான திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மோகன் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனை பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.