முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 57 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான கடிதமொன்று நேற்று (27.11.19) மாலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைக் கடிதம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கடிதத்தின் பிரதியையும் அவருக்கு அனுப்பியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று (27) தெரிவித்திருந்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தில் மீண்டும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.