Home இந்தியா106 நாட்களின் பின் சிறையில் இருந்து வெளி வருகிறார் ப.சிதம்பரம்…

106 நாட்களின் பின் சிறையில் இருந்து வெளி வருகிறார் ப.சிதம்பரம்…

by admin

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஐஎன்எக்ஸ் வழக்கில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு பிணை வழங்கினார்கள். ஆனால் அமலாக்கத்துறை இவரை உடனே கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் பிணை கிடைக்காததால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ப.சிதம்பரத்தின் பிணை  மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், பிணை வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 28-ம் தேதி நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ப.சிதம்பரத்துக்கு பிணை  வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதனையடுத்து, பிணை  நடைமுறைகள் முடிந்து, இன்று மாலை ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளியே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 106 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு அவர் வெளியே வருகிறார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More