நேபாளத்தின் கிழக்கு பகுதியில் நேற்றிரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் காவற்துறை அதிகாரி உள்ளிட்ட மூன்று பேர் பலியாகினர். நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவிலிருந்து சுமார் 200 கி.மீ கிழக்கே அமைந்துள்ளது தனுசா மாவட்டம். இம்மாவட்டதில் நேற்று இரவு பாரிய சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் கடுமையான பதட்டத்திற்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரு காவற்துறை அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்று தெரியவில்லை. இது குறித்து காவற்துறைனர் விசாரணை நடத்து வருகின்றனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகள் காரணமாக இருக்கலாம் கூறப்படுகிறது. கடந்த மே மாதம் இப்பகுதி அருகே நடந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.