Home இலங்கைமன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் உழவர் விழா….

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் உழவர் விழா….

by admin


மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் உழவர் விழாவும், உழவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது காலை 7 மணியளவில் பொங்கல் நிகழ்வு இடம் பெற்றது.

மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு அகிய 5 பிரதேசச் செயலாளர் பிரிவகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 12 உழவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது பிரதேசச் செயலாளர்கள்,மாவட்டச் செயலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கௌரவிப்பை தொடர்ந்து உழவர் விழா நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More