146
இத்தாலியிலிருந்து இலங்கை சென்றவர்கள் மற்றும் தனிமைப்படுத்தும் காலத்துக்கு உட்படுத்தப்படாதவர்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு அடையாளம் காணப்படுபவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து 9 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இத்தாலியில் இருந்து இலங்கை சென்றவர்கள் குறித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். #இத்தாலி #இலங்கை #தனிமைப்படுத்தும்
Spread the love