வடமாகாணத்தில் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுதும் முகமாக ஆளுநரின் பணிப்பின் பேரில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று செவ்வாயக்கிழமை மாகண சுகாதார அமைச்சில் நடைபெற்றது.
வடபகுதியின் சுகாதாரத்துறை மற்றும் நிர்வாகத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கலந்துரையாடலில் முக்கியமான தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்பட்டன.
அந்தவகையில்,
*அடுத்துவரும் இரண்டு வாரங்கள் கொரோனா வைரஸ் அவதானத்துக்குரிய வாரங்களாக பிரகடனபடுத்தபட்டு பாரியளவில் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
*இரண்டு வாரங்களுக்கு பொது மக்கள் ஒன்று கூடும் வைபவங்கள், நிகழ்வுகள், விழாக்களை ஒத்திவைத்தல்.
*ஏற்கனவே ஒழுங்கு செய்யபட்ட குடும்ப நிகழ்வுகளை (திருமண விழா, புப்புனிதநீராட்டு விழா, பிறந்தநாள், அந்தியேட்டி) மட்டுப்படுத்தபட்ட அளவுகளில் மிக அவசியமான உறுப்பினர்களின் பங்குபற்றுதலோடும் பாதுகாப்பாகவும் நடத்துவதனை உறுதிபடுத்தல்.
*அரசாங்கத்தால் அறிவிக்கபட்ட 14 நாடுகளிலிருந்து (ஈரான், இத்தாலி, தென்கொரியா, ஒஸ்ரியா, பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஸ்பெய்ன், சுவிஸ்ஸர்லாந்து, பிரித்தானியா , பெல்ஜியம், நோர்வே,) குறித்த காலத்துக்குள் (மார்ச் 1 இல் இருந்து) வருகை தந்தவர்கள் தங்களை தனிமைபடுத்துவதோடு, ஏற்பாடு செய்திருக்கும் சகல விசாரணை மற்றும் பரிசோதனைகளுக்கு தங்களை அவசியம் உட்படுத்துதல்
*வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பயணிகள் மறுஅறிவித்தல் வரை முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு செல்லவதை தடுத்தல்
*பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் (15.03.2020 ) சுற்றறிக்கைக்கு அமைவாக ஆளுநர் செயலகம், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி சபைகள், போன்றவற்றிற்கு பொதுமக்கள் மிக மிக அத்தியாவசிய தேவைகளைத்தவிர செல்வதை தவிர்த்தல்
*மோட்டார் வாகன வரி அனுமதி பத்திரங்களை 17.03.2020 தொடக்கம் 31.03.2020 வரை புதுப்பிக்க இருப்பவர்களுக்கான புதுப்பித்தல் செயற்பாடுகள் தற்காலிகமாக இடை நிறுத்தபட்டுள்ளது இவ் அறிவித்தல் போக்குவரத்து காவல்துறையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
*அரச மற்றும் தனியார் கல்வி நிலையங்களின் பிரத்தியேக புறக்கிருத்திய மற்றும் கல்விசார்ந்த நிகழ்ச்சிகள், பிரதேச மட்ட கழக விளையாட்டு நிகழ்வுகள், சனசமூக நிலையங்கள் போன்ற பொது அமைப்புக்களின் மக்கள் ஒன்று கூடும் சகல நிகழ்ச்சிகளும் இருவாரங்களுக்கு தடை செய்யப்படுகிறது.
*பொது போக்குவரத்து வாகனங்கள் பூரண கிருமித்தொற்று நீக்கலுக்கு அவசியம் உள்ளாக்கபடல் வேண்டும்.
மேற்குறித்த தீர்மானங்களை நடைமுறைபடுத்துவதன் அவசியத்தை உணர்ந்து அனைவருடைய பாதுகாப்பையும் கருதி பொறுப்புணர்வோடு செயற்படுத்துவதென கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. #வடமாகாணத்தில் #கொரோனா #கட்டுப்படுத்த #தீர்மானங்கள்