Home இலங்கைதனிமைப்படுத்தலுக்காக பலரை ஏற்றிச் சென்ற பேருந்துகள் விபத்தில் சிக்கின – ஒருவர் பலி…

தனிமைப்படுத்தலுக்காக பலரை ஏற்றிச் சென்ற பேருந்துகள் விபத்தில் சிக்கின – ஒருவர் பலி…

by admin

கொரோன வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக நபர்களை ஏற்றிச்சென்ற இரண்டு பேருந்துகள் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பூர் நோக்கி சுமார் 100 பேரை  ஏற்றிச்சென்ற மூன்று பேருந்துகளில், இரண்டு பேருந்துகள் கொழும்பு நோக்கி பயணித்த மரக்கறிகளை ஏற்றிச்சென்ற பார ஊர்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் பார ஊர்தியின்  சாரதி உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 26 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்துசெல்லப்பட்டவர்கள் என்றும் ஏனைய மூவரும் கடற்படை வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தினை அடுத்து, தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்துசெல்லப்பட்ட மூவர் தப்பியோடியுள்ளதாகவும் அவர்களில் இருவர் பின்னர் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More