Home இலங்கைகிராண்ட்பாஸ் – நாகலகம் வீதிப்பகுதி முடக்கம்

கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதிப்பகுதி முடக்கம்

by admin

கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள நாகலகம் வீதிப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டதையடுத்து, அப் பகுதியை இன்று (16) முதல் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதிக்கு பிரவேசிக்கும் வீதியும் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக, சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜா-எல சுதுவெல்ல பகுதியில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளருடன் நெருங்கிப் பழகிய, கொழும்பு-குணசிங்கபுர, வேல்லவீதி, கிராண்ட்பாஸ் மற்றும் நாகலகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100 பேர் நேற்று (15) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #கிராண்ட்பாஸ்  #முடக்கம்  #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More