Home இந்தியாஇந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 12,380 – பலி 414 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 12,380 – பலி 414 ஆக அதிகரிப்பு

by admin

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளதுட்ன உயரிழப்பு 414 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும்   கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை இதுவரை 1489 பேர் குணமடைந்துள்ளனர்.  #இந்தியா #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More