206
தனிமைப்படுத்தல் முகாமில் நோய் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது , அந்த முகாமுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி , அப்பகுதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டு பொறுப்பாகும். என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பார் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
பலாலி தனிமை படுத்தல் முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதனை உறுதியாக கூற முடியாது. குறிப்பாக இவர்களுக்கு தொற்று ஏற்பட்டது மத போதகரினால் ஏற்பட்ட தொற்று சங்கிலி தொடராக இவர்களுக்கும் தொற்றி இருக்கலாம். ஆனாலும் தனிமைப்படுத்தியதால் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு வந்தது என தெளிவாக கூற முடியாது.
தனிமைப்படுத்தல் முகாம்கள் அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் அந்த முகாமுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி ஆகியோர் கண்காணித்து இருப்பார்கள். இவர்களை தவிர அங்கே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களும் பொறுப்புடன் இருந்திருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இடையில் இடைவெளியை பேணி இருக்க வேண்டும். கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவி வந்திருக்க வேண்டும். ஆகவே அது ஒரு கூட்டு பொறுப்பு.
இந்த கூட்டு பொறுப்பில் எங்கே பிழை நடந்தது என என்னால் தப்போது தெளிவாக கூற முடியாது. ஆனாலும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு , மாகாண சேவை பணிப்பாளருக்கு தெளிவாக கூறியுள்ளேன். அது தொடர்பில் ஓரிரு நாளில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.
அதன் மூலம் தனிமைப்படுத்தல் முகாமில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என தெரிவித்தார். #பலாலி #தனிமைப்படுத்தல் #தொற்று #கூட்டுபொறுப்பாகும் #சத்தியமூர்த்தி
Spread the love