Home உலகம்கொரோனா – நிவாரணக் காசோலையில் டிரம்பின் பெயரை பொறிக்குமாறு உத்தரவு

கொரோனா – நிவாரணக் காசோலையில் டிரம்பின் பெயரை பொறிக்குமாறு உத்தரவு

by admin


கொரோனா வைரஸ் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிககியுள்ள லட்சக்கணக்கான அமெரிக்க மக்களுக்கு அனுப்பப்படவுள்ள காசோலையில், அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மத்திய அரசினால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தில் ஜனாதிபதி; ஒருவரின் பெயர் பொறிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த புதிய செயல்பாட்டின் காரணமாக மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் எனும் குற்றச்சாட்டு எழுந்தள்ள நிலையில் அரச அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரசினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இரண்டு ட்ரில்லியன் டொலர்கள் நிவாரண தொகுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த மாதம் மட்டும் அமெரிக்காவில் சுமார் 1.6 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #கொரோனா  #காசோலை  #டிரம்ப்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More