182
யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் காவல்துறையினரின் தாக்குதலில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு கொண்டு சென்ற இரு பெண்கள் ஊரடங்கு சட்டத்தை மீ றியதாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
குடத்தனை- மாளிகைகாடு பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்று வெள்ளிக்கிழமை காலை அத்துமீறி நுழைந்த பருத்தித்துறை காவல்துறையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். காவல்துறையினரின் தாக்குதலுக்கு இலக்கான மூன்று பெண்கள் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உணவு எடுத்து சென்ற நிலையிலேயே குறித்த பெண்கள் இருவரும் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். #பெண்கள் #கைது #குடத்தனை
Spread the love