Home இலங்கைமுள்ளிவாய்க்கால் – குமுதினிபடகு படுகொலை நினைவு யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீடத்தில்

முள்ளிவாய்க்கால் – குமுதினிபடகு படுகொலை நினைவு யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீடத்தில்

by admin
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி  நிகழ்வுகள் மற்றும் குமுதினி படுகொலை நினைவு தினமும்  இன்று யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீடத்தில் இடம்பெற்றது.
யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருநெல்வேலியில் அமைந்துள்ள முகாமைத்துவ பீடத்தின்  முன்பாக இன்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது.
இன்றைய தினம் குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாகவும் , முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாகவும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை இன்றைய மாலை 6 மணி முதல் பல்கலைகழக பிரதான வாயிலில் கோப்பாய் காவல்துறையினர் சுமார் 20 பேர் வரையில் துப்பாக்கிகளுடன் , நின்றிருந்தனர். நேற்றைய தினம் மாணவர்களின் அஞ்சலியை குழப்பும் நோக்குடன் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண  காவல்துறையினர் , பல்கலைகழக மாணவர்கள் நுழையும் வாயிலில் ஒரு மணி நேரம் காவல் இருந்த போது , மாணவர்கள் பிரதான வாயிலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர். அஞ்சலி நிகழ்வு முடிவடைந்த பின்னரே சுடரேற்றியதை அறிந்து அவ்விடத்திற்கு காவல்துறையினர் விரைந்து அஞ்சலி செலுத்தியவர்களின் விபரங்களை சேகரித்ததுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். #முள்ளிவாய்க்கால்  #குமுதினி #படுகொலை  #யாழ்பல்கலை
 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More