வரலாற்று சோதனையோ
வழமை போல்
வாழ்நாளெல்லாம்
தொழிலாளராய்
சரித்திர சாதனையா?
நாடற்றவராய் நிற்கின்றோம்
குன்றுகளில் உழைப்பவராய்
அவலம் நெருடுகிறது
இரண்டாந்தரப்
பிரஜையாகப்
பொருட்படுத்தாது
பயணிக்கின்றனர்
அன்று வெள்ளையர்
சுரண்டினர்
இன்று உள்ளவர்
சுரண்டுகின்றனர்
பாரிமாறுபவர் மனது
வைத்தால் தானே
பசிபோகும்
சுய தொழில்
வாய்ப்பற்ற நிலை
மாதருக்கான மரியாதையின்மை
குடும்ப வன்முறை
வேலைத்தள வன்முறை
உரிமைக் கோரலுக்கான
உணர்;வுகளை
ஆட்டிப்படைக்கும் ஆதிக்கம்
உணர்ந்து கொள்ளாது
வஞ்சிக்கும் அந்நியமான
சுரண்டல்
ஆக்கிரமிப்பு முதலாளித்துவ
கம்பனிகள்
பெரும் துயரினை அனுபவிக்கும்
வரலாற்று சோதனையோ
நாளாந்த உழைப்போர்
ஏராள பிரச்சினை
வருந்தும் நொடிகள்
வாய்க்குமோ
நம்பிக்கையூட்டும் மாற்றுவழி
வாழ்வு காலம் உரிமை
போராட்டத்தில்
சட்டம் குறுக்கே
நிற்கின்றது தகராது
வரலாற்று சோதனையோ
வரலாற்று சோதனையோ
ச.புஸ்பலதா
கிழக்குப் பல்கலைக்கழகம்ரூபவ்
இலங்கை.