Home இந்தியாஇந்தியாவில் கொரோனாதொற்று 4 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனாதொற்று 4 லட்சத்தை நெருங்கியுள்ளது.

by admin

இந்தியாவில் கொரோனா தொற்று 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி மொத்தம் 3,95048 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு நேற்று மட்டும் 14516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 375 பேர் மரணம் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12948 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 213831 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் நேற்று மட்டும் 9120 பேரகுணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர் இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 168269 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124331 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 54449 பேருக்கும், டெல்லியில் 53116 பேருக்கும், குஜராத்தில் 26141 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  #இந்தியா  #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More