இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து கோவாக்ஸின் எதிர்வரும் ஓஸ்ட் 15-ம் திகதிக்குள் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்து வரும் 7-ம் திகதி மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது.
இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றால் வரும் ஓகஸ்ட் 15-ம் திகதிக்குள் கோவாக்ஸின் தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.
கோவாக்ஸின் என்ற பெயரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்து கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தகக்து.
கிளினிக்கல் ஆய்வுக்கு முந்தைய பரிசோதனைகள் அனைத்தையும் பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு இருக்கிறது எனும் பரிசோதனையும் முடித்துள்ள நிலையில், இரு கட்டங்களாக மனிதர்களுக்கு மருந்தைச் செலுத்தி பரிசோதிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய சுகதாாரத்துறை அமைச்சு மற்றும் ஐசிஎம்ஆர் ஆகியவை அனுமதி வழங்கியுள்ளன.
இந்த நிலையில் இந்த மருந்து மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கும் முயற்சி வரும் 7-ம் திகதி இரு கட்டங்களாகத் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் பரிசோதனை வெற்றியடைந்தால், ஓகஸ்ட் 15-ம் திகதிக்குள் தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது #இந்தியா ,கொரோனா #தடுப்புமருந்து #அறிமுகமாக #கோவாக்ஸின்