குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த பாராளுமன்ற விவாதத்தை நிறுத்த முயற்சிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் பிணை முறி மோசடிகள் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்தப்படவிருந்த நிலையில் தற்போது இந்த விவாத்தை நிறுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி குறித்து கீனியாவல பாலித தேரர் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்த போதிலும் உண்மையான மனுதாரர் ரணில் விக்ரமசிங்கவேயாகும் எனவும் இதன் ஊடாக பாராளுமன்றிற்கு சவால் விடுக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்து அதன் ஊடாக பாராளுமன்ற விவாதத்தை நிறுத்த முயற்சிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.