Home இலங்கைஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவாகினர்…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவாகினர்…

by admin

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த பெயர் பட்டியல் இன்று (13.08.20) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (12.08.20) மாலை கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது கருத்து வெளியிட்ட அவர்,

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக

ரஞ்சித் மத்தும பண்டார,

ஹரீன் பெர்ணான்டோ,

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்,

திஸ்ஸ அத்தனாயக்க,

 எரான் விக்ரமரத்ன,

மயந்த திஸாநாயக்க

டயனா கமகே

ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More