கடந்த நல்லாட்சி அரசாங்கம் தன்னை திட்டமிட்டு சிறைக்கு அனுப்பிய போதும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தன்னை அவர்களுக்குச் சேவை செய்வதற்காக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளதாக பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொிவித்துள்ளாா்.
கடந்த 5 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் பிள்ளையான் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் தனது முதலாவது உரையினை ஆற்றியபோது இதனைத் தொிவித்துள்ளாா்.
16 வயதில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்ததாகவும் பின்னர் அவா்களது செயற்பாடுகளுடன் முரண்பட்ட காரணத்தினால் வெளியேறியதாகவும் தொிவித்துள்ள பிள்ளையான் முடிந்தளவு 13ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை தாம் காப்பாற்றியுள்ளதாகவும் தொிவித்துள்ளாா்.
மேலும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு பல தடங்கல்களும் தாமதங்களும் இருப்பதாகவும் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் அனுமதி கோர வேண்டி இருப்பதாகவும் தொிவித்த அவா் இப்படி ஒரு சூழலில் தன்னால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளாா்.
மேலும் தற்போது வட பகுதி மற்றும் தென் பகுதி மக்கள் இணைந்து பலமான ஒரு அரசாங்கத்தை அமைத்துள்ளதாகவும் இந்த அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கை மற்றும் மாகாணபை உள்ளிட்ட விடயங்களை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்பை வழங்குவேன் எனவும் பிள்ளையான் தொிவித்துள்ளாா். #நல்லாட்சி #பிள்ளையான் #சிறை #மட்டக்களப்பு