நேற்றையதினம் ஆரம்பமாகிய ஐ.பி.எல். 2020 போட்டியில் நேற்று அபுதாபியில் நடைபெற்ற முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது
முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதனையடுத்து 163 எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து, 166 ஓட்டங்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது
அதேவேளை தொடரின் 2-வது நாளான இன்று துபாயில் நடைபெறும் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கப்பிடல்ஸ் அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் போட்டியிடவுள்ளன. #ஐபிஎல் #மும்பைஇந்தியன்ஸ் #சென்னைசூப்பர்கிங்ஸ் #டெல்லிகப்பிடல்ஸ் #கிங்ஸ்லெவன்