183
குளோபல் தமிழ் செய்தியாளர்
யாழ்.பல்கலைகழக பெண்கள் விடுதியில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. அதில் அறையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
தீ விபத்தினை அடுத்து கடும் முயற்சியின் மத்தியில் தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love