143
குளோபல் தமிழ் செய்தியாளர்
பாடசாலை நிா்வாகத்தை சுயாதீனமாக இயங்க விடு ஊடகங்களுக்க எதிராக மாணவா்கள் ஆர்ப்பாட்டம்.
பாடசாலை நிா்வாகத்தை அதற்கேயுண்டான உரித்தான நெறிமுறைகளுக்கு அமைவாக சுயாதீனமாக இயங்க விட வேண்டும் என்றும் ஊடகத்தின் பெயரால் பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதாக குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் மாணவா்கள் வெளியிட்டுள்ளனா்.
அதில் அவா்கள் குறிப்பிட்டுள்ள விடயங்கள் வருமாறு
எல்லா பாடசாலைகளுக்கும் இருப்பது போன்று பாடசாலை அனுமதி நெறிமுறைகள் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கும் காணப்படுகின்றது. இது கல்வியமைச்சு மற்றும் பாடசாலையின் நெறி முறை சாா்ந்த விடயம். இ்நத நடைமுறைகள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளிற்கேற்றவாறு மாற்றியமைப்பது பாடசாலையின் தரத்தை மாத்தரமல்லாது கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விச் சமூகத்தின் நிா்வாகத்தையும் கேள்விக்குட்படுத்தும் செயலாகும்.
பாடசாலை தரப்பில் காணப்படும் நியாயங்களை பேசாமல் பாடசாலை தரப்பின் நிலைப்பாட்டையும் கருத்தையும் அறியாமல் ஒட்டுமொத்த பாடசாலை மாணவா்களையும் உளவியல் ரீதியாக தாக்கியிருக்கிறது தகுதியற்ற ஊடகச செயற்பாடுகள். சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டது ஊடக தர்மத்திற்குப் புறம்பான செயல் கண்டிக்கின்றோம்.
கையில் ஒரு கமராவும் ஒரு கணிணியும் வைத்துக்கொண்டு மேற்கொள்ளப்படுதல்ல ஊடக செயற்பாடு. ஊடக தர்மம் இருக்க வேண்டும்.குறித்த சிறுமியின் புகைப்படம் பாடசாலையின் பெயா் முதலியவற்றை ஊடக தர்மத்திற்குப் புறம்பாக வெளியிட்டிருப்பதாக அந்த சிறுமியையும் எங்கள் அனைவரது உளவியலையும் பாதிக்கச் செய்யும் செயலாகும். அச் சிறுமியை அவரது கல்வியை அவரது எதிா்காலத்தை பாதிக்கும் பொறுப்பற்ற ஊடக தர்மத்திற்கு புறம்பான செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
பாடசாலை என்பது சிறுவா்கள் கல்வி கற்கும் நிறுவனம் இந்த நிறுவனத்தைப் பற்றி எந்தவொரு விளக்கமும் இன்றி ஊடகங்களில் குழப்பமாக சித்திரிப்பது இந்த பாடசாலையில் கல்விகற்கும் அத்தனை ஆயிரம் மாணவா்களையும் ஆசிரியர்களையும், உளவியல் ரீதியாக புண்படுத்தும் செயலாகும்.
எனவே கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் பாடசாலை அனுமதி முறையை தவறான ஒன்றாக காட்ட முயற்சித்த லண்டன் இணைத்தளம் மற்றும் அதன் பிரதேச செய்தியாளா் மீது கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவா்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் பாடசாலை என்பது சிறுவா்களோடு சம்மந்தப்பட்ட விடயம் என்பதால் பாடசாலை மற்றும் சமூகங்களை குழப்பும் வகையிலான செய்திகளை கட்டுப்படுத்த கிளிநொச்சி மாவட்ட பாடசாலை சமூகங்கள் சோ்ந்து உருவாக்க வேண்டும்.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் அனுமதி முறையை தவறான ஒன்றாக விமர்சித்தமையானது வெறுமனே கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய பாடசாலை நிா்வாகத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மட்டுமன்றி எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்ட அனைத்து பாடசாலைகளையும் உடகவியலாளா்கள் என்ற பெயரில் குழப்பத்தை எற்படுத்தும் ஒரு செயலாகவே பாா்க்க வேண்டியுள்ளது.
பொறுப்புடைய நிா்வாகம் என்ற வகையில் இந்த விடயம் தொடா்பில் கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஒருமித்த குரலில் வலியுறுத்துகிறோம்.
நன்றி
மாணவா் சமூகம்
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்
இதேவேளை குறித்த மாணவா்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை பாடசாலை நிா்வாகத்திற்கு புறம்பாக கிளிநொச்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகவா் ஏற்பாடு செய்ததோடு. ஊடகயவியலாளா்களுக்கு 26-01-2016 பிற்பகல் 1.15 மணிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கிளிநொச்சி மத்தி மகா வித்தியாலயத்தில் ஆா்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது வருமாறு அழைப்பு விடுத்துள்ளாா்.
அத்தோடு அக் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஒருவா் நேரடியாக ஆர்ப்பாட்டம்இடம்பெற்ற இடத்தில் நின்ற மாணவா்களை ஒழுங்குப்படுத்தியதனையும் காணமுடிந்தது. குளோபல் தமிழ் செய்தியாளாருக்கும் குறித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரின் ஊடகவியலாளர் ஒருவரே குறுஞ்செய்தி மூலமும், தொலைபேசி மூலமும் ஆர்ப்பாட்டம் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னதாக தொடா்பு கொண்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love