மஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதுடன், 117 பேர் காயமடைந்துள்ளனா் என, பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்து ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இருவா் உயிரிழந்துள்ளதனையடுத்து இவ்வாறு அதிகாிப்பு ஏற்பட்டுள்ளது என அவா் தொிவித்துள்ளாா்.
மேலும் காயமடைந்தவா்களில் 105 பேர் கைதிகள் எனவும், இருவர் சிறைச்சாலை அதிகாரிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். #மஹரசிறைச்சாலை #உயிரிழந்தோர் #அதிகாிப்பு #கைதிகள்